Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ஜெயம் ரவிக்கு திருப்புமுனை
 
.
Thursday, 05 July, 2012 03:23 PM
.
சென்னை, ஜூலை 5:நிமிர்ந்து நில் திரைப்படம் ஜெயம்ரவிக்கு திருப்புமுனையாக அமையும் என்று இயக்குனர் சமுத்திரகனி கூறினார்.
.
போராளி படத்திற்கு பிறகு சமுத்திரகனி நிமிர்ந்து நில் படத்தை இயக்குகிறார். இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, அமலாபால் மற்றும் மேக்னா ராஜ் நாயகிகளாக நடிக்கின்றனர்.

நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள வாசன்ஸ் விஷûவல் வென்சர்ஸ் இதனை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. மூத்த இயக்குனர் கே.பாலசந்தர், லிங்குசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த படம் பற்றி இயக்குனர் சமுத்திரகனி கூறியதாவது:

ஒழுக்கம் தான் கற்பு என்று நினைத்து வாழும் மிடில்கிளாஸ் பையன்தான் படத்தின் நாயகன். இந்த வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். அவருக்கு வித்தியாசமான வேடம். இந்த படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி தரும். என்னுடைய எல்லா படங்களிலும் கமர்ஷியல் அம்சங்களோடு சமூகத்திற்கான செய்தியும் இருக்கும். அன்றாடம் வீட்டை வீட்டுவெளியே செல்லும் போது சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.

உன்னை நீ சரிசெய்து கொண்டால் உலகம் தானாக சரியாகி விடும் என்ற செய்தியை இந்த படம் வலியுறுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.தெலுங்கிலும் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் நானி நாயகனாக நடிக்கிறார். ஐதராபாத், சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
| |

மற்றவை :