ரிஸ்க் என்றால் சாதாரணமான ரிஸ்க் இல்லை. கட்டையால் கண்ணுக்கு கீழே ஓங்கி அடித்தால் கண்கள் எப்படி வீங்குமோ அவ்வளவு பெரிதாக வீங்க வைத்து நடித்திருக்கிறார். இதற்காக கிட்டத்தட்ட பத்து நாட்கள் தூங்காமல் இருந்து அந்த தோற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்.
துரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது. "ஆறு' கெட் அப், ஆறு மாநிலங்கள், ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஆறு அர்த்தம் கொண்ட சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஷாம் ஏற்கனவே 89 கிலோ எடையிலிருந்து 72கிலோவாக எடையைக் குறைத்திருக்கிறார். மேலும் ஒருவருடம் தாடியும் நீண்ட முடியுமாக ஆறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் தாண்டி படத்திற்கு இன்னும் எபெக்ட் தேவை என டைரக்டர் வலியுறுத்தியதால் பத்து நாள் தூங்காமல் இருந்து கண்கள் வீங்கியது போன்ற தோற்றதை ஏற்படுத்தி கொண்டார். இது ரிஸ்க் வேண்டாம் என்று கூறியும் ஷாம் தனது முழு அர்பணிப்பையும் வெளிப்படுத்த உறுதியாக இருந்தார். ஷாம் படபிடிப்பிற்காக வந்த போது அனைவரும் அதிர்ந்து போய்விட்டனராம். அவர் கண்ணைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சில மணி நேரத்துக்கு அவரது கண்களைப் பார்க்கவே பயந்துள்ளனர். அந்த அளவுக்கு அவரது தோற்றம் அமைந்திருந்தது. இதில் ஒரு துளி மேக் அப் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. சினிமாதான் எனக்கு எல்லாம். அதற்காக எதையும் செய்வேன் என்று உற்சாகமாக சொல்லும் ஷாம் கேரக்டருக்காக எதையும் செய்வதில் கமலும், ரஜினியும் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்கிறார். |