இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா ஏற்கனவே இணைந்து ஆறு, வேல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளனர். மூன்றுமே வெற்றிப்படங்களாக அமைந்தன.
இந்நிலையில் சிங்கம்2வில் இருவரும் மீண்டும் இணைகின்றனர். தற்போது சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா சிங்கம்2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.இந்த படத்தில் சூர்யாவோடு அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர். மேலும் விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர் ஆகியோரோடு ரகுமான் மற்றும் புதிய கதாபாத்திரங்கள் இணைய உள்ளனர். நகைச்சுவை நடிகர் சந்தானமும் இதில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சென்னை, ஐதராபாத், தூத்துக்குடி, நெல்லை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்கா, கென்யா ஆகிய நாடுகளில் பாடல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்க உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் லட்சுமணன் தயாரிக்கிறார். |