லண்டன், ஏப்.11:விநோதமான வாகனங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற இங்கிலாந்து மெக்கானிக் ஒருவர் ராட்சத பைக்கை உருவாக்கி இருக்கிறாராம்.
.
லிங்கோஷையர் பகுதியில் வசிக்கும் அவர் ஏற்கனவே உலகின் நீளமான பைக் மற்றும் நெருப்பை கக்கும் பைக் போன்ற விநோத வாகனங்களை உருவாக்கியவர். தற்போது அவர் 3 சக்கர எலக்ட்ரிக் வாகன டயர்கள் மீது பைக்கை பொருத்தி விநோதமான புதிய வாகனத்தை உருவாக்கி உள்ளாராம். பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த வாகனம் மணிக்கு 40 மைல் வேகத்தில் செல்லக்கூடியதாம்.
வாகனங்களில் தனது சாதனை தொடரும் என்று அந்த மெக்கானிக் உற்சாகத்தோடு கூறுகிறார்.