லண்டன், ஏப்.11:மனித மனம் மிகவும் விசித்திரமானது என்று சொல்லப்படுவது உண்டு. இதற்கு உதாரணமாக திகழும் வகையில் சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அமைந்துள்ளது.
.
பொதுவாக அலுவலக ஊழியர்கள் மற்றவர்களுக்கு தங்களை விட அதிக சம்பளம் கிடைக்கும் போது வருத்தமும் பொறாமையும் கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆய்வோ மேலதிகாரிகளுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்போது அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அதனால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கிறது.
100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.மேலதிகா ரிக்கு அதிக சம்பளம் கிடைக்கும்போது எதிர்காலத்தில் தங்களுக்கும் அதைவிட அதிக ஊதியம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையே இந்த மகிழ்ச்சி காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.