லண்டன், ஏப்.7:உலகிலேயே மிகவும் அழகானவர் என்ற பட்டமும் பெருமையும் மாடல் அழகி மிராண்டா கெருக்கு கிடைத்திருக்கிறதாம்.
.
செல்வாக்கு மிக்க சூப்பர் மாடலாக மிராண்டா இருந்து வருகிறார். முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் அவர் உலகிலேயே மிகவும்அழகான பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.
இந்த பட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாடல் அழகி தினமும் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதாக அலுத்துக்கொண்டுள்ளார். ஆனால் இந்த வேலை சுமைக்கு நடுவிலும் தனது செல்ல மகனுக்காக நேரம் ஒதுக்கி பாசமழை பொழிவதாகவும் அவர் பெருமை பட்டுக்கொண்டுள்ளார்.