சிட்னி, ஏப்.5:ஆன்மீகத்துறையில் இருப்பவர்கள் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான விஷயம்தான். அப்படியிருக்கையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் குத்துச்சண்டையில் புதிய சாதனை படைத்திருக்கிறாராம்.
.
டேவிட் ஸ்மித் எனும் அந்த பாதிரியாருக்கு 50 வயதாகிறது. குத்துச் சண்டையில் ஆர்வமும் திறமையும் கொண்ட அவர் சமீபத்தில் தொடர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றாராம்.
ஆறு மணி நேரம் தொடர்ச்சியாக 66 போட்டியாளர்களுடன் அவர் சண்டையிட்டுள்ளார். இதன் மூலம் அதிக நேரம் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற சாதனையும் அவர் நிகழ்த்தி உள்ளார். சேவை அமைப்புக்கு நன்கொடை திரட்டுவதற்காக அவர் இந்த சாகச முயற்சியில் ஈடுபட்டாராம்.