இசை உலகில் சிறிய நட்சத்திரமாக உருவாகி இருக்கும் அடிலி 6 முறை கிராமிய விருதுகளை வென்று சாதனை படைத்தவர்.
சிறந்த ஆல்பத்தை உருவாக்கியவர் என்ற விருதையும் இவர் வென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் பாடகி பியான்சியை மிகவும் பாராட்டி பேட்டி அளித்துள்ளார். யாராவது ஒரு பாடகரோடு தான் சேர்ந்து பாட விரும்பினால் அது பியான்சியாகத்தான் இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இருவரும் சேர்ந்து பாட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனிடையே புதிய பாடலுக்கான பணியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த பாடலை வெளியிட்டு விடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.