ஒலிம்பியா மூவிஸ் சார்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். ஆத்மியா என்ற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார். இளவரசு, சூரி, ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களை இயக்கிய எழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்கி உள்ளார்.
எப்படி துள்ளாத மனமும் துள்ளும் படம் அதன் காதல் மற்றும் காமெடிக்காக ஹிட்டானதோ அதே போல இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்று இயக்குனர் எழில் கூறுகிறார். இந்த படத்திற்காக 300க்கும் மேற்பட்ட புதுமுகங்களை பரிசிலீத்து பின்னர் மெரினா நாயகன் சிவகார்த்திகேயனை தேர்வு செய்ததாக கூறும் எழில், இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்கிறார். அதே போல மைனாவுக்கு பிறகு இமானும் இசையில் கலக்கி இருப்பதாக அவர் கூறுகிறார். |