Maalaisudar



 
 
 
 
 
 
 




.
இப்படியும் ஒரு விருது
 
.
Saturday, 24 March, 2012 03:06 PM
.
லண்டன், மார்ச் 24:பொதுவாக மிகச்சிறந்த புகைப்படங்களை தேர்வு செய்து அதை எடுத்த புகைப்படக் கலைஞர்களுக்கு மிகச் சிறந்த புகைப்பட கலைஞர் எனும் விருதை வழங்குவதுதான் வழக்கம்.
.
ஆனால் இங்கிலாந்திலோ மிகவும் வித்தியாசமாக மிகவும் மோசமான புகைப்பட கலைஞர் விருதை வழங்கி உள்ளனர்.பல நேரங்களில் புகைப்படங்கள் மிகவும் மோசமாக அமைந்துவிடுவது அல்லவா? அத்தகைய புகைப்படங்களை தேர்வு செய்து இந்த விருதை அளித்துள்ளனர்.

இந்த போட்டியில் ஸ்டூவர்ட் மெக்கி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் எடுத்த குழந்தை புகைப்படத்தில், சரியாக படம்பிடிக்க படாததால் குழந்தையின் தோற்றம் முழுவதும் தெரியாமல் ஏதோ ஒளி வீசுவது போல தோன்றுகிறதாம். இந்த படத்தை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுமாம். இதற்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சியே என்கிறார்  ஸ்டூவர்ட் மெக்கி.
| |

மற்றவை :