Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கமல்ஹாசன் வாழ்த்து
 
.
Thursday, 22 March, 2012 04:15 PM
.
சென்னை, மார்ச் 22:இயக்குனர் சேரனின் உதவியாளராக இருந்த ஷண்முகராஜ் 91 புதுமுகங்களை வைத்து ஒரு வருட ஒத்திகைக்கு பின்பு இயக்கிய "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
.
திரைப்படங்களின் தோல்வி குறித்து ஒரு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் 1 லட்சம் செலவு செய்து எடுக்கப்படும் நாடகத்துக்கு 15 நாட்கள் ஒத்திகை பார்க்கிறார்கள். ஆனால் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் திரைப்படத்துக்கு யாருமே ஒத்திகை பார்ப்பதில்லை.

இதனால் பல படங்கள் தோல்வியை தழுவுவதாக தெரிவித்திருந்தார். இனிவரும் புதுமுகங்கள் ஒத்திகை பார்த்து திரைப்படங்கள் இயக்கினால் நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தார்.

இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஷண்முகராஜா கமலின் அறிவுரையை கேட்டு தான் இயக்கும் "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்திற்கு 91 புதுமுகங்களை தேர்வு செய்தார். அவர்களுக்கு ஓராண்டு நடிப்பு பயிற்சி அளித்து
ஹாண்டிகேமராவில் அதை ஒளிப்பதிவு செய்தார்.

பின்னர் அதை எடிட் செய்து தேவையான காட்சிகளை மட்டும் பிலிம் கேமராவில் ஷýட்டிங் செய்தார். இறுதி எடிட்டிங்கிற்கு பின்னர் படம் நன்றாக வந்திருந்ததை அடுத்து இயக்குனர் ஷண்முகராஜா நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்கள் அறிவுரையை கேட்டு இயக்கிய இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

படத்தை பார்த்த கமல்ஹாசன் மிகவும் நன்றாக வந்திருப்பதாக கூறி, இயக்குனரை மனதாரா பாராட்டினார். இந்த முறையை பின்பற்றி புதுமுக இயக்குனர்கள் இயக்கினால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த தாஜ்னூர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்குளில் வெளியாகிறது.
| |

மற்றவை :