இதில் வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். காவல்துறை அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கிறார். வீரப்பன் மனைவியாக முத்துலட்சுமியாக விஜயலட்சுமி நடிக்க, வீரப்பனுடன் தொடர்பு கொண்ட முக்கிய பாத்திரத்தில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் நடித்துள்ளார். விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபிராய் நடிகர் ராஜ்குமார் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் பற்றி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:
வீரப்பன் கதையை எந்தவித சார்பு நிலையும் இல்லாமல் உள்ளது உள்ளபடி கூறியிருக்கிறோம். இதற்காக 14 ஆண்டுகள் ஆய்வு செய்து தகவல்களை சேகரித்து இருக்கிறேன். இந்த படத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு மற்றும் அதன் மூலம் திரட்டிய தகவல்கள் மலைப்பை ஏற்படுத்த கூடும். எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் வீரப்பன் கதையை நியாயமாக சொல்லி இருக்கிறேன்.
படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ள நடிகர் அர்ஜூன் இதுபற்றி கூறியதாவது: முதலில் எல்லோருக்கும் தெரிந்த கதை தானே, இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நடிக்க தயங்கினேன். ஆனால், இயக்குனர் கதையை விவரித்த விதமும், அவர் சேகரித்திருந்த தகவல்களும் புதிய பரிமாணத்தை காட்டியதால் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டேன். |