நியூஜெர்சி, மார்ச் 14:அமெரிக்காவில் உள்ள நகரசபை ஒன்றுக்கு விசித்திரமான பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதாம்.
.
நியூஜெர்சி நகரில் அமைந்துள்ள அந்த நகரசபை நிர்வாகத்திற்கு கழிவறை காகிதங்களை குறிப்பிட்ட நிறுவனம் வழங்கி வந்ததாம்.
சமீபத்தில் அந்த நிறுவனம் தனது தயாரிப்புக்கான தொகையை அதிகரித்து தருமாறு கேட்டிருக்கிறது. நகரசபை நிர்வாகம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனையடுத்து அந்நிறுவனம் கழிவறை காகிதங்களை வழங்குவதை நிறுத்திக் கொண்டு விட்டதாம். இதனால் கழிவறை காகிதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு நகரசபை என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி கொண்டிருக்கிறதாம்.