சிங்கப்பூர், மார்ச் 8:சிங்கப்பூரில் உள்ள பணிப் பெண்கள் எல்லாம் இன்று முதல் ஹாப்பி என்று பாடிக்கொண்டு இருக்கின்றனராம். இதற்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய சலுகை தானாம்.
.
வாரம் ஒரு நாள் விடுமுறை கிடைப்பது என்பது எல்லோருக்கும் சகஜமானதுதான். ஆனால் இந்த பணிப் பெண்களுக்கு விடுமுறை என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.
இனி வாரம் ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு தொழிலாளர் துறை நல அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பணிப்பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனராம். இந்த விடுமுறை அவர்களை மேலும் ஊக்கத்தோடு பணியாற்ற வழி செய்யும் என்று நம்பப்படுகிறது.