Maalaisudar



 
 
 
 
 
 
 




.
சஞ்சனாவின் புதுரூட்
 
.
Sunday, 26 February, 2012 02:58 PM
.
ரேணிகுண்டாவில் அறிமுகமான சஞ்சனா சிங் ஒன்று கைதட்டல் வாங்க வேண்டும், இல்லையென்றால் கிறங்கடிக்க வேண்டும் அதுதான் எனது ரூட் என்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
.
ரேணிகுண்டாவில் அவ்வளவு அழுத்தமான ரோல் கிடைத்தது.. இயக்குனர் பன்னீர் செல்வம் என்னை அவ்வளவு மெனக்கிட்டு மாற்றினார். அதேபோல் அழுத்தமான பாத்திரங்களில் நடிக்கவே காத்திருந்தேன். இடையில் கேட்டுக்கொண்ட நண்பர்களுக்காக கோ மறுபடியும் ஒரு காதல், மயங்கினேன் தயங்கினேன்,  வெயிலோடு விளையாடு போன்ற படங்களில்   எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடிக் கொடுத்திருக்கிறேன். சினிமாவில் நண்பர்கள் முக்கியம். அதன்பிறகு கிடைத்தார் இயக்குனர் கணேசன் காமராஜ். யாருக்குத் தெரியும் படத்தில் ஹீரோயினாக  அதிர்ந்து பயந்து பயப்படவைக்கிற நடிப்பைக் கொட்டியிருக்கேன். அடுத்து அதியமான் சார் இயக்கும் தப்புத் தாளங்கள்  படத்தில் ஒரு கிளாமர் ஹீரோயின்... சி எஸ் அமுதன் சார் இயக்கும் இரண்டாவது படம் படத்திலும் நடிக்கிறேன்.

இப்போதான் ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்.. இருந்தாலும் அவார்டுக்குரிய படங்களில் நடிக்க பெரிய ஆசை இருக்கு.. பணம் பற்றி கவலையில்லை.. ஒரு சிலருக்கு உதவியாக இருக்கவும், என் தேவைக்கு பணம் இருந்தால் போதும்.. மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள்... நல்ல நடிகை என்ற பெயர், புகழ் தான் வேண்டும். ஹோம்லி, கிளாமர் எது என் ரூட்? என்று கேட்டால் ரெண்டுமே பண்ணனும். எதையும் விட்டு வைக்கக்கூடாது. சவாலா எடுத்து நடிக்கணும். ஷோ கேஸ் மாதிரி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும். இல்லைன்னா, கிரங்கடிக்கணும் பாஸ்.. நமக்கு ரெண்டு ரூட்டுமே ஓகே தான்.
| |

மற்றவை :