Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பாலுமகேந்திரா வேண்டுகோள்
 
.
Thursday, 02 February, 2012 03:07 PM
.
சென்னை, பிப்.2:வணிக ரீதியிலான சினிமாவை புறக்கணிக்கக்கூடாது என்றும், வணிக சினிமாவின் வரம்புக்குள் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்றும் இயக்குனர் பாலு மகேந்திரா கூறினார்.
.
நார்வே நாட்டில் 3வது ஆண்டாக நடைபெறும் நார்வே தமிழ் திரைப்பட விழா தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழாவில் பங்கேற்கும் திரைப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர்கள் நார்வே திரைப்பட விழாவின் அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலுமகேந்திரா வந்திருந்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடப்பது தமிழ் திரைப்படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க துவங்கி இருப்பது என்பதன் அடையாளமாக விளங்குகிறது. இது மகிழ்சியை தருகிறது.கடந்த ஆண்டு நடைபெற்ற நார்வே பட விழாவில் எனது மாணவர்கள் மற்றும் அவரது படங்கள் பங்கேற்றன.

எது நல்ல சினிமா எனும் கேள்விக்கு யாருக்கு நல்ல சினிமா எனும் கேள்வியைக் கொண்டே பதில் அளிக்க முடியும்.நச்சு எண்ணத்தை விதைக்காத படங்களே நல்ல படங்கள்.வணிக ரீதியான சினிமாவை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கக்கூடாது. வணிக சினிமாவின் வரம்புக்கு உட்பட்டே நல்ல படங்களை எடுக்க முடியும். அதற்கு தேவை துணிச்சலும், நல்ல சினிமாவுக்கான மனதும்தான்.

எனது மூடுபனி, அழியாத கோலங்கள், மறுபடியும், மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக சினிமா வகையைச் சேர்ந்ததுதான். இந்த வகையிலும் நல்ல படங்களை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய நர்த்தகி படத்தின் தயாரிப்பாளர் கேசவன், திரைப்பட விழாவுக்கான படங்கள் சிபாரிசின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படும் நிலையில், நல்ல படங்களாக தேர்வு செய்து வாய்ப்பளிக்கும் நார்வே திரைப்பட விழா குழுவை பாராட்டினார்.

வசிகரன் சிவலிங்கம் எனும் தனி மனிதரின் முயற்சியால் துவங்கிய பட விழா இன்று 7 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுவதோடு நார்வே அரசின் ஆதரவையும் பெற்றிருப்பதாக நிகழ்ச்சியில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
வசிகரன் சார்பில் இசையமைப்பாளர் உதயன் நன்றி தெரிவித்தார்.
| |

மற்றவை :