இந்த படமும் தமிழில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. இந்த படத்தில் ஷாருக்குடன் பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குனால் கபூர் மற்றும் ஓம்பூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆசியாவை ஆட்டிப்படைக்கும் நிழல் உலக தாதாவாக ஷாருக்கான் வருகிறார். கோலாலம்பூர், பெர்லின் என பல நகரங்களில் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளன. பரான் அக்தர் இயக்கி உள்ளார். வரும் 23ம் தேதி திரைக்கு வருகிறான் "டான்2'. |