Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
மம்பட்டியான்
 
.
Thursday, 08 December, 2011 02:37 PM
.
நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள மம்பட்டியான் திரைப்படம் 700 திரையரங்குகளில் வெளியாகிறது.
.
25 ஆண்டுகளுக்கு முன்னர் தியாகராஜன் நடித்து வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை மகன் பிரசாந்தை வைத்து தியாகராஜன் மம்பட்டியான் என்னும் பெயரில் இயக்கியுள்ளார்.இதில் பிரசாந்தோடு மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 16ந் தேதி வெளியாகிறது. மிகப்பெரிய அளவில் 700 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.  மம்பட்டியான் திரைப்படம் இப்படி பெரிய அளவில் வெளியாவது மகிழ்ச்சியை தருவதாக பிரசாந்த் உற்சாகமாக கூறுகிறார். படத்தில் உள்ள பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகி இருப்பதும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.

மம்பட்டியான் படம் வெளியான கையோடு பிரசாந்த் 2 பெரிய நிறுவனங்களின் படத்தில் நடிக்க ஒப்பந்த மாகி இருக்கிறாராம். 2 படங்களிலுமே பெரிய இயக்குனர்கள் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.
| |

மற்றவை :