"3' படத்திற்காக தனுஷ் எழுதிய பாடல் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் "3'. இளம் இசை அமைப்பாளர் அனிரூத் இசை அமைக்கும் இந்த படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை எழுதி அதை அவரும் பாடவும் செய்துள்ளார்.
.
ஒய் திஸ் கொலவெறி எனும் அந்தப் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான விழாவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் இந்தப் பாடல் இன்டர்நெட்டில் வெளியாகி அனைவராலும் விரும்பி கேட்கப்படும் பாடலாக மாறி உள்ளது.
பேஸ்புக், டிவிட்டர் என்று எங்கு பார்த்தாலும் இந்தப் பாடல்தான் கேட்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மயக்கம் என்ன? படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. இதிலும் தனுஷ் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.