பெரும் பொருட்ச்செலவில் தரணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஒஸ்தி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசும் போது கூறியதாவது: எனது படங்களில் பாடல்கள் ஹிட்டாகி விடும். இதற்கு யுவன் சங்கர்ராஜா முக்கிய காரணம். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எங்கள் கூட்டணியில் எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்து வருகின்றன. இந்நிலையில், இருவருக்கும் ஒரு பிரேக் தேவை என்று யுவன் கூறிக்கொண்டே இருப்பார். ஒஸ்தி படம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அவர் தான் தமன் பெயரை சொல்லி நல்ல இசையமைப்பாளர் என்று சிபாரிசு செய்தார். அதன் அடிப்படையில் தான் தமன் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். எதிர்பார்த்தது போலவே சூப்பரான பாடல்களை கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். சல்மான் கான் நடித்த தபாங்கின் தமிழாக்கமாக ஒஸ்தி உருவாகி உள்ளது. சல்மான் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் தயங்கியதாகவும், ஆனால் இயக்குனர் தரணி தந்த ஆதரவால் நம்பிக்கையோடு நடித்திருப்பதாகவும் சிம்பு கூறினார். படம் விரைவாக முடிந்திருப்பதற்கு தயாரிப்பாளர் ரமேஷûக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். |