Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
அஜித் ஆட்டத்துக்கு தயார்
 
.
Wednesday, 17 August, 2011 03:59 PM
.
அஜித்தின் 50வது திரைப்படமான "மங்காத்தா' திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
.
இந்த படத்தின் கதையை நான் அஜித்தை மனதில் வைத்துக் கொண்டு எழுத வில்லை. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை மனத்தில் வைத்து எழுதினேன். ஆனால் இந்த கதையை அறிந்த அஜித் தானே நடிக்க விரும்பினார். இந்த கதையை அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அஜித் இதில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவரது ரசிகர்களுக்கு படம் முழு விருந்தாக அமையும். திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அஜித், திரிஷா இடையே கெமிஸ்ட்டிரி அற்புதமாக வந்துள்ளது. அர்ஜூன் லட்சுமி ராய், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் 5 கெட்ட பாத்திரங்களை மையமாக கொண்டது. அதில் ஒரு பாத்திரமாக அஜித் வருகிறார். மிகவும் சிறப்பாக அவரது பாத்திரம் உருவாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மங்காத்தா படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. செப்டம்பர் 3ல் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| |

மற்றவை :