வன்முறை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லண்டன் பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வரும் பாலிவுட் நட்சத்திரங்கள் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
குணால் கோலி இயக்கும் பெயரிடப்படாத பெயர் ஒன்றுக்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் பிரியங்கா சோப்ரா மற்றும் சஹீத் கபூர் நடித்து வருகின்றனர். லண்டனில் தற்போது கலவரம் வெடித்திருப்பதால் இந்த நட்சத்திரங்களின் பாதுகாப்பு பற்றி பலரும் கவலையோடு விசாரித்து வருகின்றனர். ஆனால் நட்சத்திரங்களும், படப்பிடிப்பு குழுவினரும் கலவரத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாப்போடு இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். நாட்டிங்காம் பகுதியில் படப்பிடிப்பு குழுவினர் தங்கியுள்ளனர்.