சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "ராணா' படத்தில் தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழாவின் போது ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். ராணா திரைப்பட ஷýட்டிங் அக்டோபர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ராணா படம் துவங்குவது தாமதமாவதால் தீபிகா படுகோன் இந்த படத்திலிருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை தீபிகா படுகோன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது பற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: ராணா படத்திற்காக எப்போது கேட்டாலும் கால்ஷீட் தர தயாராக இருப்பதாக கூறியிருக்கிறேன். இந்த ஆண்டு துவங்கினாலும் சரி, அடுத்த ஆண்டு துவங்கினாலும் சரி கால்ஷீட் தருவதாக உறுதி அளித்துள்ளேன். ரஜினியின் உடல்நலமே முக்கியம். ரஜினியின் மகளும், இணை தயாரிப்பாளருமான சௌந்தர்யா எனக்கு நல்ல தோழியாகி விட்டார். ரஜினி சிங்கப்பூரில் இருந்தபோது அவரோடு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். |