காதல், மோதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து மற்ற வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது.
இளவரசு, மயில்சாமி, யோகி தேவராஜ் இவர்களோடு நடிகர் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல்களை அறிவுமதி, கபிலன், யுகபாரதி எழுதியுள்ளனர். எம்.சரவணன், எம்.எஸ்.குகன் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக தஞ்சை உள்ளிட்ட இடங்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியும் இடம் பெற்றுள்ளது. |