Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தாண்டவக்கோனே
 
.
Sunday, 10 July, 2011 02:17 PM
.
ஆம்பியான்ஸ் மூவி மேக்கர்ஸ்சார்பில் பிராபகர் சீனிவாசன் தயாரிக்கும் படம் தாண்டவக்கோனே. இயக்குனர் சீமானிடம் உதவியாளராக இருந்த சுப்பு சுஜாதா இதனை இயக்குகிறார். இதில் சஞ்சய் நாயகனாகவும் நந்தகி நாயகியாகவும் நடித்துள்ளனர். 
.
சம்பத், கஞ்சாகருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் நாயகனுக்கு எல்லாம் இருந்தும் அவன் எல்லாவற்றையும் இழந்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது தான் கதையின் மையம் என்கிறார் இயக்குனர். விதியை சார்ந்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை இயல்பாக சொல்லியிருக்கிறேன் என்கிறார் அவர். கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொல்கிறார்.

படத்தின் நாயகன் சஞ்சய் பாத்திரத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு வருட காலம் தலை முடியும் தாடியும் வளர்த்து கொண்டு நடித்திருக்கிறாராம். படம் ரிலிசான பின் தான் மற்ற படங்களை ஒப்பு கொள்வது என வைராக்கியமாக இருக்கிறாராம்.

அவள் பெயர் தமிழரசி நாயகி நந்தகி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அவரும் இந்த படம் நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.  படத்திற்கு இளையராஜ இசையமைத்துள்ளார். காட்சிகள் எடுக்கப்பட்ட விதத்தை அவர் ஏற்கனவே மனம் திறந்து பாராட்டியுள்ளார். இளையராஜா எழுதியுள்ள அம்மா பற்றிய பாடல் ஹைலைட்டாக இருக்குமாம்.
| |

மற்றவை :