Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கோலிவுட்டுக்கு வரும் ஒபாமா
 
.
Thursday, 07 July, 2011 02:43 PM
.
இந்திய அரசியல் களத்தில் அவ்வப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் குறிப்பிடப்படுவது உண்டு. இப்போது தேர்தலை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் தமிழ்படம் மூலம் ஒபாமா கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார்.
.
தேசிய விருது வென்ற பெண் இயக்குனரான ஜானகி விஸ்வநாதன் இயக்கும் இந்த படத்திற்கு "ஒம் ஒபாமா' என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டபோது, திருப்பூரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கட்டுரை ஒன்றை படித்த போது இந்த படத்தை உருவாக்குவதற்கான எண்ணம் ஏற்பட்டதாக ஜானகி விஸ்வநாதன் கூறுகிறார்.

உலகமயமாதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்த்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவது போல, நகைச்சுவையான சம்பவங்களை கொண்டு ஓம் ஒபாமா படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

கதைப்படி கேடாரப்பாளையம் என்ற ஊரில் தேர்தல் நடக்கிறது. பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் ஒபாமா வரப்போவதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை காட்சிகளாக்கி இருக்கிறார் இயக்குனர்.
பஞ்சாயத்து, தேர்தல், பிரச்சாரம், பக்தி, காதல், உலகமயமாதல், பொருளாதார பாதிப்பு, ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.

இந்த படத்திற்கு பால் ஜேக்கப் இசையமைத்துள்ளார். ஸ்ருதிகா பவுண்டேஷன் சார்பில் ஜானகி விஸ்வநாத் இயக்கி தயாரித்துள்ளார்.
| |

மற்றவை :