Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கவுண்டமணி வீட்டில் விஜய்
 
.
Wednesday, 06 July, 2011 04:19 PM
.
வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் நடிகர் கவுண்டமணி பிறந்த  வல்லகுண்டாபுரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் உள்ள விசேஷ தன்மைக்காக இந்த காட்சிகளை எடுத்ததாக இயக்குனர் ஜெயம் ராஜா கூறுகிறார்.
.
படம் வெளியான பிறகு இந்த ஊரில் அப்படி என்ன விசேஷம்  என்பது தெரியும் என்கிறார் அவர். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா நடித்துள்ளனர். மேலும் 15 வில்லன்கள் மற்றும் 30 காமெடியன்கள் நடிக்கும் பிரமாண்டமாக காட்சி உருவாகி இருக்கிறதாம்.  

சரண்யா மோகன் விஜய்யின் தங்கையாக வருகிறார். அவருக்கு திருமணம் நடைபெறும் காட்சி எடுக்கப்பட்டபோது ஊரே திரண்டு வந்து பங்கேற்றதாம். இந்த காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கும் என்கின்றனர்.

கவுண்டமணி வீட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது இயக்குனர் ஜெயம் ராஜா மற்றும் நடிகர் விஜய் கவுண்டமணியின் தாயாரை சந்தித்து பேசி உள்ளனர்.  வேலாயுதத்தில் விஜய் பால்காரராக நடிக்கிறாராம். அவரது பாத்திரத்தின் பெயர் வேலு.
| |

மற்றவை :