ஏற்கனவே வெளிநாடுகளில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்தின் பாங்காங்கிற்கு சென்று பாடல் காட்சி ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அத்தோடு படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அஜீத்துடன் அர்ஜுன், திரிஷா, லஷ்மிராய், ஆன்ட்ரியா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அஜீத்தின் பாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். விரைவில் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 12 அல்லது 19ந் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |