Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வைரமுத்துவின் பாராட்டு
 
.
Sunday, 12 June, 2011 02:45 PM
.
விளையாட்டு வீரர்கள் தமிழ் சினிமாவின் பக்கம் வந்து கொண்டிருக்கும் காலம் இது. அந்த வகையில் நீச்சல் வீரரான அருண் பாலாஜி சேவற்கொடி படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.
.

கேரள நாயகி பாமா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சீமான், ராதாமோகன் ஆகியோருடன் உதவியாள ராக இருந்த சுப்பிரமணியன் இயக்கி உள்ளார். சத்யா இசையமைத்திருக் கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றபோது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "கம்பி மத்தாப்பு' எனும் பாடலில் வரும் "அழுக்கு துணியை உடுத்தி அவர் தளுக்கி நடக்கும்போதும்' எனும் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து சுட்டிக்காட்டி பாராட்டினார். தமிழ் சினிமா மாறி வருகிறது. அதன் அடையாளம் தான் அழுக்கெல்லாம் அழகாகி விட்டது என்று அவர் இந்த பாடலை மேற்கோள் காட்டி பேசினார். மகரந்த் கமலாகர், ஆனந்த் ரெட்டி தயாரித்துள்ளனர்.
| |

மற்றவை :