Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
காத்திருக்கும் சாந்தனு
 
.
Sunday, 22 May, 2011 02:33 PM
.
பொதுவாக நாயகிகளோடுதான் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகும் என்பார்கள். ஆனால் சந்தானத்துக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது என்று கண்டேன் படம் பற்றி உற்சாகமாக கூறுகிறார் பாக்யராஜின் வாரிசான சாந்தனு.
.
சக்கரக்கட்டி, சித்து +2 படத்தை தொடர்ந்து சாந்தனு நடித்துள்ள மூன்றாவது படமான கண்டேன், வரும் 20ந் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்றும் சாந்தனு உற்சாகத்தோடு கூறுகிறார்.

காமெடி கலந்த காதல் கதையான இந்தப் படத்தில் சந்தானம் காமெடியில் கலக்கியிருப்பதாகவும் படத்தில் தனது நண்பராக வரும் அவரோடு நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாகவும் சாந்தனு கூறுகிறார்.சந்தானம் தன் பங்குக்கு இதுவரை பல படங்களில் தான் நண்பனாக நடித்திருந்தாலும் இதில் புதுவித நண்பனாக வருவதாக கூறுகிறார். அது மட்டுமல்லாமல் படம் முழுவதும் வரும் வகையில் தனது பாத்திரம் அமைந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

சிவசெல்வநாயகி அம்மன் மூவிஸ் சார்பில் டி.சி.எஸ். தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.சி.முகில் இயக்கியுள்ளார். சாந்தனுவுக்கு ஜோடியாக ஆந்திர நாயகி ரஷ்மி கௌதம் நடித்துள்ளார். விஜய் எபினேசர் இசையமைத்துள்ளார்.
| |

மற்றவை :