Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தெய்வ திருமகன்
 
.
Sunday, 17 April, 2011 02:13 PM
.
மதராசபட்டிணம் விஜய் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் தெய்வ திருமகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.குளுமை நிறைந்த ஊட்டியில் வண்ணமயமான பின்னணியில் படத்தில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவாம்.
.
ஊட்டியில் உள்ள சாக்லெட் ஆலை ஒன்று முக்கிய பங்கு வகிக்கிறதாம். கிளைமேக்ஸ் காட்சியை சென்னையில் எடுத்துள்ளனர். இதற்காக சென்னை ஐகோர்ட் வளாகம் போன்ற செட் அமைத்தனராம். கலை இயக்குனர் சந்தானம், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோர் சிறப்பாக பணியாற்றியிருப்பதாக இயக்குனர் விஜய் கூறுகிறார். மனதளவில் குழந்தை போன்ற பாத்திரத்தில் விக்ரம் தனக்கே உரிய பாணியில் அற்புதமாக நடித்திருக்கிறாராம். தயாரிப்பாளர் மோகன் நட்ராஜும் இந்த படம் உருவாகிய விதம் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
| |

மற்றவை :