Maalaisudar



 
 
 
 
 
 
 




.
புதுமுகங்கள் நடிக்கும் காதல் வேதம்
 
.
Sunday, 23 January, 2011 01:46 PM
.
மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் வினயன் முற்றிலும் புதுமுகங்களை வைத்து காதல் வேதம் எனும் படத்தை இயக்குகிறார்.
.
தமிழில் இது அவரது ஐந்தாவது படமாகும்.  படத்தை இயக்குவதோடு ஆகாஷ் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார்.  இன்று உலகம் முழுவதும் வேரூன்றி இருக்கும் வன்முறையையும் தீவிரவாதத்தையும் எதிர்த்து போராடும் கதைக்களம்தான் காதல்வேதம் என்கிறார் அவர். முரளிகிருஷ்ணா மற்றும் கவுதம் நாயகர்களாக நடிக்க காதல் சொல்ல வந்தேன் நாயகி மேக்னா நாயகியாக நடிக்கிறார்.

சாஜன் மாதவ் இசையமைத்துள்ளார். சென்னை, கேரளா, பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  கிளைமேக்ஸ் காட்சியை பெங்களூரில் பல கோடி ரூபாய் செலவில் எடுக்க உள்ளனர்.
| |

மற்றவை :