அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை புதிய இயக்குனரான சாண்டில்யா இயக்குகிறார். சென்னையை சுற்றி நடக்கும் வகையிலான கதை அம்சத்தை கொண்ட இந்த படத்தில்திருக்குறள் முக்கிய பங்கு வகிக்கிறதாம். அதே போல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா படத்திற்காக திருக்குறளை மையமாக வைத்து ஒரு அருமையான பாடலை உருவாக்கி தந்திருக்கிறாராம். படத்தின் இசை சிறப்பாக இருக்கும் என்று கூறும் உதயா, தனக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். படத்தில் காமெடியானாக நடித்திருக்கும் சத்தியனும் நகைச்சுவையில் கலக்கியிருப்பதாக அவர் கூறுகிறார். மதராசா பட்டிணத்தை இயக்கிய சகோதரர் விஜய் தன்னை வைத்து இயக்க விரும்பினாலும் அதற்கு முன்பாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்பியதாக உதயா மேலும் கூறுகிறார். தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய இயக்குனர்கள் மற்றும் புதிய நடிகர்களை அறிமுகம் செய்வேன் என்று கூறும் உதயா, மற்ற தயாரிப்பாளர்களின் படத்திலும் நடிப்பேன் என்று உற்சாகமாக கூறுகிறார். |