Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தூங்கா நகரம்
 
.
Sunday, 09 January, 2011 02:12 PM
.
கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தூங்கா நகரம். மதுரையை கதை களமாக கொண்டு உருவாகியுள்ள
.
இந்த படத்தில் பசங்க, களவாணி படங்களின் நாயகன் விமல், நடோடிகளில் நடித்த பரணி, ரேணிகுண்டாவில் நடித்த நிசாந்த், ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனருமான கௌரவும் இவர்களோடு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகியாக அங்காடித்தெரு புகழ் அஞ்சலி நடித்துள்ளார்.

இயக்குனர் கௌரவ். கே.எஸ்.ரவிகுமார் மற்றும் மகாராஜன் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். படத்திற்காக மதுரையிலேயே தேர்வு நடத்தி 3000 பேரிலிருந்து 70 பேரை புதுமுகங்களாக அறிமுகம் செய்துள்ளார். மதுரையை மிகவும் அழகாக படமாக்கியிருப்பதாக இயக்குனர் பெருமையோடு தெரிவிக்கிறார்.

மேலும் 6 லட்சம் பேர் கூடும் சித்திரை திருவிழாவில் பாடல் காட்சி ஒன்றை பிரம்மாண்டமான முறையில் எடுத்துள்ளாராம். மதுரையின் உயரமான கட்டிடங்களின் உச்சியிலும், முதல் முறையாக மீனாட்சி அம்மன் கோபுரத்தின் உச்சியிலும் உயிரை பணயம் வைத்து காட்சிகளை படமாக்கி உள்ளனராம்.

விஜய் உலகநாதன் இப்படி ரிஸ்க் எடுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி.பாபு இசையமைத்துள்ளார். பாடல்கள் பதிவாக்கப்பட்டதில் நிறைய புதுமை செய்துள்ளனராம். கலை இயக்குனர் சந்தானம் மதுரையின் பிரபலமான வழுக்கு மரத் திருவிழாவுக்காக 50 லட்சம் ரூபாய் செலவில் போட்ட செட் உட்பட படத்தில் ஹைலைட்டான பல அம்சங்கள் இருக்கின்றனவாம்.
| |

மற்றவை :