Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தேசிய விருது வாங்குவேன்
 
.
Sunday, 02 January, 2011 02:38 PM
.
தம்பியுடையான் படத்தை இயக்கி ராஜாமகேஷ் இயக்கும் அடுத்த படம் "இனி சிந்தாது இந்திய ரத்தம்' தம்பியுடையான் படத்தை தயாரித்த எம் தியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பெப்ஸி தலைவரான விபி குகநாதன் கதை வசனம் எழுதுகிறார். நீண்ட இடைவெளைக்கு பிறது கதை வசனம் எழுதும் குகநாதனின் 250வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
.
இந்த கதையை தானே இயக்குவதாக இருத்ததாகவும் ஆனால் ராஜா மகேஷ் கதையை கேட்டு தனக்கு தருமாறு வேண்டுகோள் விடுத்ததும் அதற்கு ஒப்புக்கொண்டார். தம்பியுடையான் படத்தில் பிரச்சனையை விளக்கிகூறும் பேராசிரியர் வேடத்தில் குகநாதன் நடித்திருக்கிறார்.

அப்போதே ராஜா மகேஷ் திட்டமிட்டு செயல்படும் விதம் தன்னை கவர்ந்ததாக கூறும் குகநாதன் அதன் காரணமாகவே தனது கதையை அவர் கேட்டதும் தந்து விட்டதாக கூறுகிறார்.

நெருப்புக்கு விதை போடும் கதை. ஆனால் புத்தனுக்கும் காந்திக்கும் சமர்ப்பணம் என்று தனக்கே உரிய பாணியில் கதை பற்றி அவர் கூறுகிறார். இது வரை தமிழ்  தமிழர் சார்ந்த பிரச்சனைகள் பற்றி அதிகம் பேசி வந்துள்ள நான் இந்த படத்தில் தேசியத்தை வலியுறுத்தியுள்ளதாக கூறுகிறார். அது மட்டும் அல்ல இது வரை பல விருதுகளை பெற்றிருந்தாலும் தேசிய விருதை வாங்கியதில்லை என்னும் குறையை சமீபத்தில் உணர்ந்ததாக கூறும் குகநாதன் இந்த கதை தனக்கு தேசிய விருது வாங்கித்தரும்
என நம்புவதாகவும் தெரிவித்தார்.

படத்தின் இயக்குனரான ராஜா மகேஷ் தம்பியுடையான் போல இந்த படம் சர்ச்சைக்குரியதாக இருக்காது என்கிறார். ஒலியும் ஒளியும் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.தேவா இசையமைக்கிறார். 19 ம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது.
| |

மற்றவை :