Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
குமரன் இயக்கும் தேநீர் விடுதி
 
.
Sunday, 02 January, 2011 02:35 PM
.
இசையமைப்பாளராக பூ, களவாணி படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த எஸ் எஸ் குமரன் இயக்குனராக மாறி தேநீர் விடுதி படத்தை இயக்கி வருகிறார். குமரன் திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். ஒளிப்பதிவாளராக பயின்ற அவர் இசைத்துறையில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தானே இயக்குனராகியிருக்கிறார்.
.
இதற்கு காரணம் இவருக்கும் ஆரம்பத்திலேயே படம் இயக்குவதில் ஆர்வம் இருந்தது தான் தேநீர் வீடுதி மூலம் அவரது இயக்குனர் கனவு நனவாகியுள்ளது.

திரைப்படக்கல்லூரியில் தன்னோடு பயின்ற நண்பர்களை இந்த படத்தில் தொழிநுட்ப கலைஞர்களாக இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கல்லூரி கால கலாட்டாக்கள் பல படத்தில் காட்சிகளாகி இருக்கின்றனவாம். படம் ரசித்து மகிழக்கூடிய வகையில் காமெடியாக இருக்கும் என்கிறார். நமது வாழ்க்கையில் தேநீர் விடுதிக்கு உள்ள முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் படத்தின் பெயர் அமைந்திருப்பதாக கூறுகிறார்.ஆதித் மற்றும் ரேஷ்மி இதில் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். மேலும் ஒரு ஜோடியும்
உண்டாம். குமரனே இசையமைக்கிறார் என்பதை சொல்ல வேண்டியதில்லை பீகாக் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
| |

மற்றவை :