Maalaisudar



 
 
 
 
 
 
 




.
சமீரா ரெட்டியின் சந்தோஷம்
 
.
Sunday, 19 December, 2010 03:54 PM
.
கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள் படத்தில் நடித்து வரும் சமீரா ரெட்டி அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்
.
லிங்குசாமி இயக்கும் படத்திலும் அவர் நாயகியாக நடிக்கிறார். தற்போது பிரியதர்ஷன் இயக்கும் இந்தி படத்தில் நடித்து வரும் சமீரா, சமீபத்தில் மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

குடும்பத்தினரோடு குதூகலமாக பிறந்த நாளை கொண்டாடிய சமீராவுக்கு பெற்றோர்கள் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்து விட்டனராம். அதோடு  டீலக்ஸ் பிளாட் ஒன்றையும் பரிசளித்துள்ளனர்.
இந்த சந்தோஷத்தோடு சந்தோஷமாக சமீரா  சிறு வயது முதல் தனது நண்பர்களாக இருப்பவர்களோடு  பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்ததுதானாம்.

குடும்பத்தினர் மற்றும் சிறு வயது தோழிகளோடு பிறந்தநாளை கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம் என்று கூறுகிறார் சமீரா.

| |

மற்றவை :