Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
மனம் திறக்கும் பிரபுதேவா
 
.
Wednesday, 08 December, 2010 12:05 PM
.
நடன இயக்குனரிலிருந்து நடிகராகி, இப்பொழுது இயக்குனராக பிஸியாக இருக்கும் பிரபுதேவா "எங்கேயும் காதல்" படத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான  செய்திகளில் அடிபட்டு வரும் பிரபுதேவா, தன்னுடைய அடுத்த படம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்துமனம் திறந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
.
அப்பொழுது அவர் கூறியதாவது: நடன இயக்குனரான பிறகு நடிகராக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. எதையும் நான் திட்டமிடுவதில்லை. எல்லாம் சூழ்நிலை மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்ப அமைகிறது. இயக்குனரானது கூட அப்படித்தான்.  

எதையும் தேடிச் செல்வதில்லை. வருவதை விருப்பமாக ஏற்றுக்கொள்கிறேன். கமர்ஷியல் இயக்குனராக அடையாளம் வந்த பிறகு "எந்திரன்' படத்திற்கு நடனம் அமைத்தேன். இந்த வாய்ப்பு வந்தபோது விரும்பி ஏற்றுக்கொண்டேன்.  அதேபோலத்தான் தங்கர்பச்சனின் இயக்கத்தில் "களவாடிய பொழுதுகள்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதற்கு சம்மதித்தேன். முதலில் எனக்கு இந்த படத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. மற்றவர்களை விட்டுவிட்டு என்னை ஏன் இந்த படத்தில் நடிக்க வைக்க நினைத்தீர்கள் என்று தங்கரிடம் கேட்டேன். நீங்க கமர்ஷியல் ஆளு என்று எடுத்திருக்கும் பெயர்தான் உங்களை அழைக்க காரணம் என்று அவர் கூறினார்.

கமர்ஷியல், டான்ஸ், மசாலா மீறி நமக்கு இன்னொரு பரிமாணம் தர முயற்சிக்கிறார் என்று புரிந்துகொண்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கேற்ப படம் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படம் சீரியசாக இருந்தாலும் கமர்ஷியலாக ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு எனக்கொரு ஆசை வந்துள்ளது. தங்கரும் ஒரு நடிகரும்தான். அவரை எனது டைரக்ஷனில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனக்கும் விததியாசமான படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இல்லை. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு பழகிவிட்டேன். சிறிய பட்ஜெட் படங்கள் சரிவருமா என தெரியவில்லை. அதனால்தான் வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். களவாடிய பொழுதுகள் போலவே சந்தோஷ் சிவனின் உருமி படமும் மிகவும் வித்தியாசமானது.

வாஸ்கோடகாமாவை இளைஞர்கள் தேடிப் போய் சொல்வதுபோல இந்த கதையை நிறைய ஆய்வு செய்து தயார் செய்துள்ளார். இந்தப் படமும் எனக்கு மறக்க முடியாத படமாக இருக்கும்.  

ஜெயம்ரவியை வைத்து நான் இயக்கி உள்ள எங்கேயும் காதல் படம் கலகலப்பான காதல் கதை. ஆக்ஷன் கலந்த அதிரடி விருந்தாக இது அமையும். இந்த படம் முடிந்த பின்னர் விஷால் சமிரா ரெட்டி வைத்து ஒரு படம் இயக்குகிறேன். அது முடிந்த பிறகு பாலிவுட்தான். அக்ஷய் குமாரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளேன்.

இவ்வாறு உற்சாகமாக கூறும் பிரபுதேவா தன்னைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே செய்திகள் வருகின்றன. இந்த அளவுக்கு முக்கியத்துவம் தேவையில்லை என்று புன்சிரிப்போடு கூறுகிறார்.
| |

மற்றவை :