Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சிறுத்தையாக சீறும் கார்த்தி
 
.
Sunday, 05 September, 2010 02:19 PM
.
சூர்யாவுக்கு ஒரு சிங்கம் என்றால் கார்த்திக்கு ஒரு சிறுத்தை கிடைத்திருக்கிறது.
.
சமீபத்தில் நான் மகான் அல்ல படத்தின் மூலம் மீண்டும் வெற்றி கொடி நாட்டியிருக்கும் கார்த்தி, ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும்  படத்தில்  நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தான் சிறுத்தை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் கார்த்தி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா  நடிக்க, சந்தானம் உள்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிவா, இந்த படத்தை இயக்க உள்ளார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். சென்னை மற்றும் கர்நாடகாவில் உள்ள பதாமி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பரில் சிறுத்தை சீற உள்ளது.
| |

மற்றவை :