Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
புதுமுகங்கள் நடிக்கும் யுகம்
 
.
Sunday, 05 September, 2010 02:17 PM
.
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனரானவர்கள் பட்டியலில் பிரபல ஒளிப்பதிவாளர் பவன் சேகரும் இணைந்துள்ளார்.
.
ஏஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ரவிக்குமார், பூங்கொடி தயாரிக்கும் யுகம் படத்தை பவன்சேகர் இயக்க உள்ளார். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளராக இருந்தவரும், அதே நேரம், அதே இடம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான பவன் சேகர், யுகம் மூலம் இயக்குனராக உருவாகிறார். அதே நேரம்,  அதே இடம் படத்தில் நடித்த ராகுல்  மாதவ் நாயகனாக நடிக்க, பட்டாளம் படத்தில் நடித்த தீப்தி நாயகியாக நடிக்கிறார்.  ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படம் ஒரு பேமிலி திரில்லராக அமையும் என்கிறார் இயக்குனர்.

நாயகன், நாயகி குடும்ப வாழ்க்கையில் சந்தேகம் எனும் விதை விழுந்து விருட்சமாக வளருவதால் ஒவ்வொரு கனமும் ஒரு யுகமாக இருக்கிறது என்பது தான் படத்தின் கதையாம்.படத்தின் பெரும் பகுதியை ஒரு அப்பாட்மென்டிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளனர். பாடல் காட்சிகளுக்கு மட்டும் ஊட்டிக்கு செல்ல உள்ளனராம்.  பொன்ராஜ் இசையமைக்கிறார்.
| |

மற்றவை :