Maalaisudar



 
 
 
 
 
 
 




.
ரெயிலில் வந்த நாயகி
 
.
Sunday, 22 August, 2010 02:47 PM
.
நகைச்சுவை நடிகரான சின்னஜெயந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நீயே என் காதலி.400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சின்னஜெயந்த் இயக்கி உள்ள நான்காவது படம்  இது.
.
இன்றைய காதலை நகைச்சுவையான இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார் சின்னி. பிரேம்குமார் எனும் புதுமுகம் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது சிறய பட்ஜெட் படமான இதனை வெளியிட முன் வந்த எக்ஸ்பிரஷன்  மீடியாவுக்கு சின்னஜெயந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

படத்தின் பாடல் சிடியை சூர்யா வெளியிட, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.
படத்தில் நாயகியாக நடித்துள்ள டெல்லியைச் சேர்ந்த நடிகை பிரியா வர்மாவை சின்னஜெயந்த் மிகவும் பாராட்டினார். மற்ற நடிகைகளைப் போல விமானத்தில் தான் வருவேன் என்றெல்லாம் அடம் பிடிக்காமல் ரெயிலில் வந்து படத்தில் நடித்து கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
| |

மற்றவை :