காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் நாயகனின் அம்மாவாக சிறிய வேடத்தில் வந்தாலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார் எலிசபெத். எம்டன் மகன் படத்தில் முதலில் அறிமுகமான இவர், தம்பிஉடையான், வீரம், மாத்தியோசி, கற்றது களவு, தம்பி அர்ஜுனா என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ராவணன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக வருவது இவர்தானாம். |
திருப்பூர், சிக்குபுக்கு, கருப்பர் நகரம், அல்லி நகரம் என விரைவில் வெளியாக உள்ள படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். நர்சரி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிய இவருக்கு படப்பிடிப்பு ஒன்றை பார்க்க சென்றிருந்த போது நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததாம். இதன் பிறகு வீட்டில் இருந்தவர்கள் ஊக்கம் தரவே நடிப்புத் திறைக்கு வந்து விட்டார். கேரளாவில் பிறந்தாலும் இவர் படித்து வளர்ந்தது எல்லாம் காஞ்சியில் தானாம். காதல் சொல்ல வந்தே படத்தில் தனது பாத்திரத்தில் நல்ல மரியாதை கிடைத்திருப்பதாக கூறும் அவர், வில்லி வேடம் உட்பட எல்லா வகையான பாத்திரங்களிலும் நடிக்க தயார் என்கிறார். |