Maalaisudar



 
 
 
 
 
 
 




.
நந்தா நந்திதா
 
.
Sunday, 08 August, 2010 11:40 AM
.
நந்தா நந்திதா என படத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதோடு, மெசேஜ் சொல்லும் படமாகவும் இருக்கும் என்கிறார் இதன் இயக்குனர் ராம் ஷிவா.ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது எத்தனை அவசியம் எனும் கருவை அடிப்படையாகக் கொண்டு கதை அமைத்திருக்கிறாராம்.
.
கல்லூரி பருவத்தில் கல்வியை விட்டு விலகி பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தடம் மாறும் நாயகன் எப்படி காதலியின் வழிகாட்டுதலால் மீண்டும் சரியான பாதைக்கு திரும்புகிறான் என்பதை படம் உணர்த்தும் என்கிறார் அவர்.இந்த படத்தில் நாயகனாக ஹேமச்சந்திரன் நடிக்க, நாயகியாக இன்னொரு நயன்தாரா என்று எல்லோராலும் வர்ணிக்கப்படும் மேகனா சுந்தர் நடிக்கிறார். நாசர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

சூப்பர் டீம் சினிமாஸ் சார்பில் கோவிந்தராஜ், நாகராஜ், கோபால் இணைந்து தயாரிக்கின்றனர். மெசேஜ்  சொல்லும் படமாக இருந்தாலும் கமர்ஷியல் அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும் என்கிறார் இயக்குனர்.
| |

மற்றவை :