Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
இரட்டை வேடத்தில் அனுஷ்கா
 
.
Sunday, 25 July, 2010 03:33 PM
.
 அருந்ததியில் மிரட்டிய அனுஷ்கா இப்போது "பஞ்சமுகி'யில் இரட்டை வேடத்தில் மிரட்ட வருகிறார்.தெலுங்கில் அனுஷ்கா நடித்து வெளியான அருந்ததி திரைப்படம் தமிழில் அருந்ததீயாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
.
அருந்ததி படத்தை அடுத்து அனுஷ்கா தெலுங்கில் பஞ்சாக்ஷரி எனும் படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா இந்தப் படத்தை தயாரிக்கிறார். தமிழில் இந்தப் படம் பஞ்சமுகி எனும் பெயரில் கே.வேணுகோபால் தயாரிப்பில் வெளியாக உள்ளது.

பஞ்சாக்ஷரி மற்றும் ஹனி என இரண்டு வேடங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். விஜய் சாம்ராட் நாயகனாக நடிக்க நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

அருந்ததி படத்தை மிஞ்சும் அளவுக்கு இதில் கலக்கான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளனவாம். அரை மணி நேரத்திற்கும் மேலாக கிராபிக்ஸ் காட்சி வருகிறதாம்.
| |

மற்றவை :