சிலந்தி படத்தை இயக்கிய நரன் எனும் புதிய படத்தை இயக்குகிறார். அக்னீஸ்வரன் நாயகனாக நடிக்க, பூர்ணா நாயகியாக நடிக்கிறார்.
.
கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி நாயகி பூர்ணா நடிகை ஜோதிகாவின் தீவிர ரசிகையாக வருகிறாராம்.
ஜோதிகாவை போலவே பழக்க வழக்கங்களை கொண்டவர் நாயகி என்பதால் பூர்ணா இந்த வேடத்திற்கு தன்னை தயார்படுத்தி கொள்ள ஜோதிகா நடித்த படங்களை ஆர்வத்தோடு பார்த்து வருகிறாராம்.
இந்த படத்தின் திரைக்கதையில் இதுவரை பார்த்திராத புதுமை இருக்கும் என்கிறார் இயக்குனர் ஆதி.நம்மை விட ஒரு உயர்ந்த சக்தி இருப்பதை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.