தாம்தூம் படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் எண்டர்டைன்மென்ட், மெஜஸ்டிக் மல்டி மீடியா தயாரிக்கும் படம் சிக்குபுக்கு. ஆர்யா, ஸ்ரேயா நடிக்கும் இந்த படம் பயணம் சார்ந்த அழகான காதல் கதையாக இருக்குமாம். லண்டனில் தொடங்கி காரைக்குடியில் முடியும் காதல் பயணமாக அமைந்துள்ள இந்த படத்தின் காட்சிகள் குன்னூர், மைசூர், கூர்க் ஆகிய எழில் கொஞ்சும் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. |