சமூகம் சார்ந்த காதல் கதையாக இதனை உருவாக்கியிருப்பதாக இயக்குனர் தெரிவிக்கிறார்.படத்தில் சதீஷ் மற்றும் விமல் நடராஜன் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். சுப்ரஜா, ஐஸ்வர்யா என இரண்டு நாயகிகள் இவர்களில் சுப்ரஜா மற்றும் விமல் நடராஜன் ஆகிய இருவருமே தற்போது பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் தனது குருவான அகத்தியனை முக்கிய வேடத்தில் இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார். லக்ஷிகா பிலிம்ஸ் சார்பில் படத்தை தயாரிக்கும் கேப்டன் காமராஜும் படத்தில் நடித்திருக்கிறாராம்.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத் திருக்கிறார். தங்கர்பச்சனின் உதவியாளரான அகர் செங்குட்டுவன், இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் வரும் பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் தனது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பெற்றவை என்கிறார் இயக்குனர். |