Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கமல் வழியில் கரண்
 
.
Sunday, 27 June, 2010 02:23 PM
.
கமல் நடித்த நம்மவர் படத்தில் அறிமுகமான நடிகர் கரண். கதாபாத்திரம் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கமல் பாணியையே பின்பற்றி வருகிறார். இப்போது  நடிப்பதற்கு முன்னர் ஒத்திகை  பார்ப்பதிலும் கமல் வழியை அவர் கடைப்பிடிக்க உள்ளார்.
.
நாடகங்களுக்கு ஒத்திகை பார்ப்பது போல சினிமாவுக்கும் ஒத்திகை பார்த்து தயாராக வேண்டும் என்று கமல் சமீபத்தில் கூறியிருந்தார்.  அதன் எதிரொலியாக கமலின் சிஷ்யரான கரண், தான் நடித்து கொண்டிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு 3 நாள் ஒத்திகை பார்த்திருக்கிறார்.

அவரது யோசனையை  இயக்குனர் வி.சி.வடிவுடையான் ஏற்று கொண்டு  இந்த ஒத்திகையை நடத்தி இருக்கிறார்.  உண்மை கதை என்பதால் ஒத்திகை நல்ல பலனை தந்திருப்பதாக நடிகர் கரண் தெம்பாக சொல்கிறார்.
| |

மற்றவை :