ஆனால் கதை தாமிரபரணி ஓடும் நெல்லையில் நடக்கிறதே தவிர படித்துறையில் அல்ல என்கிறார் இயக்குனர் சுகா.ஆறு ஓடிக்கொண்டே இருக்கும். மனிதர்கள் வந்து போவார்கள், படித்துறை மவுனசாட்சியாக அங்கேயே நிலைத்திருக்கும் என்பதற்கான குறியீடாக படித்துறையை பயன்படுத்தியிருப்பதாக கூறும் இயக்குனர் வாழ்க்கையின் இறக்கத்திற்கும் படித்துறை ஒரு குறியீடு என்கிறார். இதையெல்லாம் மையமாக கொண்டு எதார்த்தமானபடமாக படித்துறை உருவாகி வருகிறது. மாடலான அபிராம் நாயகனாக அறிமுகமாக, சாந்தினி நாயகியாக நடிக்கிறார். நெல்லை மாவட்டத்தின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் இந்த படத்தில் பதிவாகியிருக்கிறதாம். இந்த படத்திற்காக அண்மையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய தேரோடும் வீதியிலே எனும் பாடலை படமாக்கி யுள்ளனர். ஆர்யாவின் தி ஷோ பிப்பில் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.கர்நாடக இசைக்கலைஞர்கள் ஜெயஸ்ரீ மற்றும் சுதா ரகுநாதன் தேரோடும் வீதியிலே பாடலை பாடியுள்ளனர். |