பழனியப்பா கல்லூரி படத்தில் நடித்த பிரதீப் நாயகனாக நடிக்கிறார். காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சாவ்லா, மோனிகா, அர்ச்சனா மற்றும் சவுந்தர்யா என நான்கு நாயகிகள் உள்ளனர். கராத்தே மணியின் மகன் ராஜ்குமார் மற்றும் பவன் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். கிரைம், சஸ்பென்ஸ் கலந்த ஆக்ஷன் படமாக அகராதி உருவாகி இருக்கிறதாம். சுந்தர் சி பாபு இசை அமைத்துள்ளார். சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி மற்றும் சிவகாசியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. |